• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுநீரக நோயினை முன்னதாகவே இனங்காணும் நடமாடும் 08 நோயாளர் பிணி வண்டிகளை வழங்குதல்
- இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் பிரதான சுகாதார பிரச்சினையாக மாறியுள்ள காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய் காரணமாக 13 மாவட்டங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை நாடுவது அவர்களுடைய சிறுநீரகங்களின் செயற் பாடானது சுமார் 60 சதவீதம் பாதிக்கப்பட்டதன் பின்னரென இனங்காணப் பட்டுள்ளது. ஆயினும், இந்த நோயினை முன்னதாகவே இனங்காணுவதன் மூலம் நோய் நிலைமை அதிகரிக்கும் அத்துடன் அதற்கான சிகிச்சையாக மேற்கொள்ளப்படும் குருதி மாற்றல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிலைமைகளுக்கு தள்ளப்படாமல் நோயாளிகளின் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது. நீண்டகால சிறுநீரக நோய்க்கு சிபாரிசு செய்யப்பட்ட சிகிச்சை முறையாவது நோயை முன்னதாகவே இனங்கண்டு பரிசோதனைகளை செய்து அவற்றின் முடிவுகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்திலேயே சிகிச்சை வழங்குவதாகும். இதற்கான வசதிகளை செய்யும் பொருட்டு சீன அரசாங்கத்தினால் சிறுநீரக நோயினை இனங்காண்பதற்குத் தேவையான உபகரணங்களுடன் கூடிய 08 நோயாளர் பிணி வண்டிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நன்கொடையினை பெற்றுக் கொள்வதற்கு சீன அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.