• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொகுவெல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
- கொகுவெல மற்றும் கெட்டம்பே சந்திக்கு அருகாமையில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வொன்றாக இந்த இடங்களில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நிர்மாணிப்புகளுக்குத் தேவையான நிதியினை ஹங்கேரிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான கடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கும் கொகுவெல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஹங்கேரியாவின் Betonutepito Plc கம்பனிக்கு 52 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்கு வழங்குவதற்குமாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.