• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையின் விநியோக வலையமைப்பை மேம்படுத்துதல்
- இலங்கை மின்சார சபையின் விநியோக வலையமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான துணைக்கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டமொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி யுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் தேவையான பொருட்களின் கொள்வனவு 09 பொதிகளின் கீழ் செய்வதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தின் பொதி 5 - லொட் 5 என்பதன் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள பொருட்கள் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 3.17 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மற்றும் 9.43 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Leader Cable Industry Berhad நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.