• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு MRI இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
- மூளை மற்றும் மத்திய நரம்புத் தொகுதியில் உள்ள பல்வேறுபட்ட நிலைமைகளையும் மார்பு மற்றும் இதய நோய்களையும் இனங்காண்பதற்கு காந்த ஒத்ததிர்வு இயல்நிலை வரைவை (MRI) பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் MRI இயந்திரத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொள்வனவு செய்வதற்கான பெறுகையினை, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 1.65 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரும் 44.85 மில்லியன் ரூபாவும் கொண்ட தொகைக்கு M/s.Dimo (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டும் அதே நிறுவனத்தினால் வழங்கப்படும் இரண்டு வருட உத்தரவாத காலப்பகுதியை அடுத்து ஐந்து வருட காலப்பகுதிக்கு 296,231 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட செலவில் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தமொன்றை அந்த நிறுவனத்துடன் கைச்சாத்திடும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.