• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செயற்கை கண் வில்லைகளை உறுப்பு மாற்றுவதற்கான கண்படல சத்திர சிகிச்சைக்களுக்காக பயன்படுத்தப்படும் 29 Phacoemulsification உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 1.18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு செயற்கை கண் வில்லைகளை உறுப்பு மாற்றுவதற்கான கண்படல சத்திர சிகிச்சைக்களுக்காக பயன்படுத்தப்படும் 29 Phacoemulsification உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s. Delmage Forsyth & Co. Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டும் அதே நிறுவனத்தினால் வழங்கப்படும் இரண்டு வருட உத்தரவாத காலப்பகுதியை அடுத்து ஐந்து வருட காலப்பகுதிக்கு ஒவ்வொரு உபகரணம் சார்பிலும் 937,850/- ரூபாவைக் கொண்ட செலவில் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தமொன்றை அந்த நிறுவனத்துடன் கைச்சாத்திடும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.