• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருதி நாளம் சம்பந்தப்பட்ட நோய் நிலைமைகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் 02 Digital Fluoroscopy உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- மூளை, இருதயம் உட்பட பல்வேறுபட்ட உடலுறுப்புகளில் குருதி நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய் நிலைமைகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது கதிர்வீச்சு படத்தை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் 02 Digital Fluoroscopy உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசுகளின் பிரகாரம் 1.1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s Dimo (Pvt.) Ltd., கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இரண்டு (02) வருட உத்தரவாத காலப்பகுதியின் பின்னர் மேலும் 05 வருட காலத்திற்கு 35.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு இந்த உபகரணங்களின் சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.