• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுகங்கை நீர்வழங்கல் விரிவாக்கல் கருத்திட்டம் - கட்டம் I இற்கான மதியுரைச் சேவைகள் ஒப்பந்தத்தை வழங்குதல்
- களுகங்கை நீர்வழங்கல் விரிவாக்கல் கருத்திட்டத்தின் கட்டம் I சார்பில் 31,810 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நோக்கத்திற்கான கடன் உடன்படிக்கையொன்றை யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகராண்மையுடன் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கு ஊடாக, மேல் மாகாணத்தின் தெற்குப் பிரதேசத்தில் நீர்வழங்கல் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கும் மற்றும் தெஹிவளை மற்றும் மொரட்டுவை பிரதேசங்களில் நீர்வழங்கல் வலையமைப்புகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 558.32 மில்லியன் யப்பான் யென்னும் மற்றும் 773.19 மில்லியன் இலங்கை ரூபாவும் கொண்ட தொகைக்கு யப்பானின் M/s.Nihon Studio Consultants Co. Ltd., நிறுவனத்தின் கூட்டுத் தொழில்முயற்சியான M/s.TEC International Co.Ltd., இலங்கையின் M/s.Ceywater Consultants (Pvt.) Ltd., இலங்கையின் M/s.Resources Development Consultants (Pvt.) Ltd., ஆகிய நிறுவனங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குவதற்காக மேற்போந்த ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.