• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1991 ஆம் ஆண்டில் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
- அரசாங்க நிறுவனங்களில் அரசகரும மொழிகள் கொள்கையின் அமுலாக்கத்தை கண்காணித்து மேற்பார்வை செய்யும் பொருட்டு 1991 ஆம் ஆண்டில் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கான திருத்தங்களானவை, அதன் நிருவாக அலுவல்களை மீள ஒழுங்கமைப்பதற்கும், அரசாங்க நிறுவனங்களில் அரசகரும மொழிகள் கொள்கையின் அமுலாக்கத்தை கண்காணித்து மேற்பார்வை செய்வதற்குத் தேவையான தத்துவங்களுடன் இவ்வாணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும் மற்றும் மொழி உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை பயனுறுதிவாய்ந்த விதத்தில் விசாரணை செய்வதற்கும் அத்தியாவசியமெனக் கருதப்படுகின்றது. அதற்கிணங்க, கூறப்பட்ட குறிக்கோளை மனதிற்கொண்டு, 1991 ஆம் ஆண்டில் 18 ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்களை செய்யும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.