• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை ரண்மினித்தென்னயில் உத்தேச கொக்கோ அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் சாத்தியத்தகவாய்வொன்றை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதியை நீடித்தல்
- உலகளாவிய கொக்கோ உற்பத்திக் கம்பனி ஒன்றான இஸ்ரேலிலுள்ள Bean & Company நிறுவனத்துடன் இணைந்து அம்பாந்தோட்டை ரண்மினித்தென்னயில் கொக்கோ அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் சாத்தியத்தகவாய்வொன்றை மேற்கொள்ளும் பொருட்டு Sri Lanka Molstar Corp Company நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டிருந்தது. இந்த நோக்கத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட நடைமுறைத் தாமதம் காரணமாக, கூறப்பட்ட சாத்தியத்தகவாய்வின் செயற்பாடுகளை இதுவரை பூர்த்தி செய்வதற்கு இயலாதிருந்துள்ளது. ஆதலால், இந்தக் கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு காலப்பகுதியை மேலும் ஆறு மாதங்களினால் நீடிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்குஅபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.