• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரில் நகர மீள் உருவாக்க கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
- கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் கிட்டத்தட்ட 50,000 குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்குடன், 190 பில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டு நகர மீள் உருவாக்க நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்வதுடன், 400 ஏக்கர் காணிப் பரப்பொன்றை வர்த்தக நோக்கங்களுக்காக விடுவிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, கூறப்பட்ட கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான மாளிகாவத்தையிலுள்ள காணியிலும் கெத்தாராமையில் அப்பிள்வத்தையிலும் புளுமெண்டாலின் கிம்புலாஎல்லவிலும் இரத்மலானை நீர்ப்பாசன காணியிலும் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளை முதலீட்டு வங்கி கடன் திட்டத்தின் கீழ் 2,272 வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.