• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருவான்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம்
- யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ருவான்வெல்ல பிரதேச செயலகப் பிரிவின் பன்னிரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் தழுவும் விதத்தில் ருவான்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. களனி கங்கையில் நாளொன்றுக்கு 4,400 கனமீற்றர் கொள்ளளவினைக் கொண்ட நீர் கோபுரம், 4,000 கன மீற்றர் கொள்ளளவைக் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் 300 மீற்றர் சுத்திகரிக்கப்படாத நீரை பம்பி பண்ணல், பனாப்பிட்டி, மஹல்ல, கஹன்தொட்ட மற்றும் இம்புலான ஆகிய பிரதேசங்களில் நான்கு சுத்திகரிப்பு நீர்த் தேக்கங்களை நிர்மானித்தல் 20.5 கிலோ மீற்றர் அனுப்பீட்டு குழாய் வழி மற்றும் 100 கிலோ மீற்றர் விநியோக குழாய் வழி போன்ற ஆக்கக்கூறுகளை இந்த கருத்திட்டம் கொண்டுள்ளது. இந்த கருத்திட்டத்தில் மேலும் செய்யப்பட வேண்டுமென திட்டமிடப்பட்ட இம்புலான, கண்ணன்தொட்ட மற்றும் பனாபிட்டிய ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தல், இந்த நீர்தேக்கங்களின் அனுப்பீட்டு, விநியோக முறைமையின் ஒரு பகுதியை நிர்மாணித்தல் போன்ற பணிகளுக்கு தேவையென மதிப்பிடப்பட்டுள்ள நிதியினை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் 2019 ஆம் ஆண்டிலிருந்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்குமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.