• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றியமைத்தல்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடங்கள் வவுனியா வளாகத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. மேலும், நிதி மற்றும் கணக்கீட்டுத் திணைக்களமும் பொருளியல் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் திணைக்களமும் வியாபார கற்கைகள் பீடத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பௌதிக விஞ்ஞானத் திணைக்களமும் உயிரியல் விஞ்ஞானத் திணைக்களமும் பிரயோக விஞ்ஞான பீடத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. ஆதலால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக, அப்பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகளின் தரத்தை உயர்த்தும் நோக்குடனும் அந்த பட்டப்படிப்பு கற்கைநெறிகளை ஆங்கில மொழிமூலத்தில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையிலும், தாபிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.