• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விருசர சிறப்புரிமை அட்டை - இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தல்
- இலங்கையில் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அமைதியை கட்டியெழுப்புவதற்கும் அங்கவீனமுற்ற முப்படையினரதும், பொலிஸினதும் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் யுத்த வீரர்கள் சார்பிலும் இராணுவ நடவடிக்கைகளின் போது தமது உயிர்களை தியாகம் செய்தவர்கள் காணாமற் போயிருந்தவர்கள் சார்பில் அவர்களில் தங்கியிருப்போர் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 'விருசர' எனப் பெயர் கொண்ட சிறப்புரிமை அட்டையொன்று வழங்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட சிறப்புரிமை அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம், நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் சுகாதாரம், கல்வி, வங்கியியல், காப்புறுதி மற்றும் குத்தகை ஆகிய துறைகளில் சேவைகளை வழங்கும் கிட்டத்தட்ட 70 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் விசேட நலன்களை அவர்களால் அனுபவிக்க முடியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையான யுத்த காலப்பகுதியில் முப்படையிலும் பொலிஸிலும் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலும் சேவையாற்றியுள்ள அத்துடன் தற்போது ஓய்வு பெற்றுள்ள யுத்த வீரர்கள் சார்பிலும் மற்றும் அக்காலப்பகுதியில் சேவையாற்றியுள்ள அத்துடன் இன்னமும் சேவையாற்றி வருகின்ற யுத்த வீரர்கள் சார்பிலும் கூறப்பட்ட நிறுவனங்களின் கீழ் சேவையாற்றிய பொழுது மரணித்த மற்றும் காணமல்போன உத்தியோகத்தர்கள் சார்பில் அவர்களில் தங்கியிருப்போருக்கும் இதற்கு மேலதிகமாக அங்கவீனமுற்ற அத்தகைய சிவில் உத்தியோகத்தர்களுக்கும் விருசர அட்டைகளை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.