• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறந்த அரசாங்க பங்குடமையின் இரண்டாவது தேசிய செயல்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் காலப்பகுதியைத் திருத்துதல்
- அரசாங்க நிருவாகத்தின் வினைத்திறனான செயற்றிறன் கருதி வௌிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கும் பிரசைகளை வலுவூட்டுவதற்கும் ஊழலுக்கு எதிராக போரிடுவதற்கும் மற்றும் புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்து வதற்கும் அரசாங்கத்தினால் காட்டப்பட்ட பாரிய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்து வதை இலக்காகக் கொண்ட பல்தரப்பு முன்னெடுப்பொன்றே திறந்த அரசாங்க பங்குடமையாகும். இது குறித்து எதிர்பார்க்கப்படும் நோக்கம் யாதெனில் திறந்த அரசாங்க பங்குடமையின் சகல பங்குபற்றல் நாடுகளினாலும் சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட கடப்பாடுகள் உள்ளடங்கலாக இரண்டு (02) வருட வருடாந்த தேசிய செயல்திட்டத்தினை தயாரிப்பதாகும். இலங்கை அரசாங்கத்தின் முதல் 02 வருட திறந்த வருடாந்த தேசிய செயல்திட்டத்தினை (2016-2018) நடைமுறைப் படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. உரிய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து 2018 ஆம் ஆண்டிலிருந்து முன்னோக்கியதாக 2018 10 31 ஆம் திகதியிலிருந்து 2020 09 30 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவற்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள இரண்டாவது செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்து வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அமுலாக்கத்தை ஆரம்பிக்கும் காலப்பகுதியானது அப்போதைய மட்டில் கடந்துவிட்டிருந்தபடியால், அடுத்த காலவட்டத்திற்கு ஒத்திசைவாக அமையும் பொருட்டு 2019 03 01 ஆம் திகதியிலிருந்து 2021 08 31 ஆம் திகதிவரை செயற்பாட்டில் இருக்குமாறு கூறப்பட்ட செயல்திட்டத்தின் அமுலாக்க காலப்பகுதியானது திருத்தப்பட்டுள்ளதென்று அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.