• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலா தொழிற்துறையினை வலுவூட்டுவதற்கான "நிவாரணப் பொதி
- கடந்த தசாப்பத காலத்திற்குள் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியானது சுற்றுலா கைத்தொழிலாகும். சிவில் யுத்தம் முடிவடைந்தமையினால் 2009 ஆம் ஆண்டில் 500,000 இற்கும் குறைந்த மட்டத்தில் நிலவிய சுற்றுலா பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. இதற்கமைவாக சுற்றுலா கைத்தொழில் 2018 ஆம் ஆண்டளவில் வௌிநாட்டு அனுபீடுகள் மற்றும் தைத்த ஆடைகள் என்பன தவிர நாட்டின் மூன்றாவது கூடியதும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதுமான அந்நிய செலாவணியினை ஈட்டும் மூலவளமாக மாறியது. அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இந்த துறையின் எதிர்கால நிலையற்ற தன்மை மற்றும் அதன் நிலைபேறான தன்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்பன காரணமாக இந்த தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று தாபிக்கப்பட்டது. இந்த குழுவின் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுற்றுலாத் துறையில் முதலீட்டாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்கள் மற்றும் ஆட்களினால் பெற்றுள்ள கடன்களை செலுத்துவதற்கு சலுகைக் காலமொன்றை வழங்குதல், கடன்களை மீள் அட்டவணைப்படுத்தல், இரண்டு வருட கடன் மீள செலுத்தும் காலப்பகுதியுடன் அரசாங்கத்தினால் மானிய வட்டி விகிதாசாரத்தின் 75 சதவீதத்தை ஏற்கும் செயற்பாட்டு மூலதன கடன் வசதியொன்றை "Enterprise sri lanka” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்குதல், தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு கருவிகளுக்கு வரி விலக்களித்தல், பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் மற்றும் சுற்றுலா முகவர்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட வரியினை 2019 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து 2020 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை 5 சதவீதம்வரை குறைத்தல் போன்ற சலுகைகளை வழங்கும் பொருட்டு பதில் நிதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.