• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட பகுதி புகையிரத சேவைக்காக குளிரூட்டப்பட்ட 02 டீசல் பன்முக அலகு தொகுதிகளை கொள்வனவு செய்தல்
- புகையிரத திணைக்களத்திடமிருந்த புகையிரத எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை பயன்படுத்தி வட பகுதி புகையிரத சேவை 2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு, பின்னர் மலையக புகையிரத பாதையில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 50 அடி அளவிலான பயணிகள் புகையிரத பெட்டிகளைக் கொண்ட குளிரூட்டப்பட்ட டீசல் பன்முக அலகு தொகுதிகளை பயன்படுத்தி கல்கிஸ்சைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய நகர்சேர் புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த புகையிரத சேவைக்காக நிலவும் அதிக கேள்வி மற்றும் பொதுமக்களின் ஈர்ப்பு என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 65 அடி அளவிலான குளிரூட்டப்பட்ட பயணிகள் புகையிரத பெட்டிகளைக் கொண்ட புதிய S13 டீசல் பன்முக அலகு தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கு உரியதாக இதற்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு மேலதிகமாக வட பகுதி புகையிரத சேவைக்காக பயன்படுத்தும் பொருட்டு குளிரூட்டப்பட்ட 02 S13 டீசல் பன்முக அலகு தொகுதிகளை M/s. RITES LTD நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் தற்போது வட பகுதி புகையிரத சேவையில் ஈடுபடுத்தியுள்ள 50 அடி அளவிலான பயணிகள் புகையிரத பெட்டிகளைக் கொண்ட குளிரூட்டப்பட்ட டீசல் பன்முக அலகு தொகுதி உல்லாச பயணிகளிடையே உயர் ஈர்ப்பும் அதிகரித்துவரும் கேள்வியும் உடைய மலையக புகையிரத பாதையில் சேவையில் ஈடுபடுத்துவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. .