• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- பொது மக்களுக்கு மிக தரம்வாய்ந்த, வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு 33 ஆசனங்களைக் கொண்ட 53 சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஐந்து வருடங்களில் செலுத்தப்பட வேண்டிய குத்தகை அடிப்படையில் 444 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Lanka Ashok Leyland PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.