• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பக்ரீறியா தொற்று நோய் எதிர்ப்பு தடுப்பூசி மருந்து புட்டிகள் 4,000,000 கொள்வனவு செய்தல்
- பக்ரீறியா தொற்று நோய் எதிர்ப்பு மருந்தொன்றாக பயன்படுத்தப்படும் Cefuroxime Sodium தடுப்பூசி BP 750 mg அல்லது Cefuroxime தடுப்பூசி USP 750 mg புட்டிகள் 4,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 197.89 மில்லியன் ரூபாவைக் கொண்ட (1.24 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) தொகைக்கு இந்தியாவின் M/s Inject Care Parenterals (pvt) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.