• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திரைப்பட மாளிகைகளை அபிவிருத்தி செய்வதற்கு கடன் வசதிகளை விரிவுபடுத்துதல்
- தற்போது ஓரளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் உயர் கேளிக்கை மற்றும் விருப்புடன் கூடியதாக திரைப்பட தொழிற்துறையின் மீள் அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் தலையீடு முழுவதும் அவசியமாகவுள்ளதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போது தொழிற்பாட்டிலுள்ள திரையரங்குகளுக்கு நவீன தொழினுட்பத்தை உட்சேர்ப்பதற்கும் அத்துடன் உயர் நியமம் கொண்ட திரைப்பட தொழிற்துறையொன்றை ஆக்குவதற்குத் தேவைப்படும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நவீன திரைப்படத் தொழிற்துறைக்கு பொருந்தும் தர உறுதியினைக் கொண்டு மூடப்பட்ட திரைப்பட மாளிகைகளை மீளத் தாபிப்பதற்கும் அத்துடன் புதிய திரைப்பட மாளிகைகளை ஆரம்பிப்பதற்கு திரைப்பட மாளிகை உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்கும், என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சலுகை கடன்களை வழங்கும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.