• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய பிரதேச செயலக பிரிவுகளைத் தாபித்தல்
- உயர் சனத்தொகை அடர்த்தி மற்றும் உள்ளடக்குவதற்கான பாரிய விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் காணப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பொதுச் சேவைகளை வழங்கும் போது எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் , அனுகுவழியினைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டும் 2012 எல்லை நிர்ணய குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும், ஹிக்கடுவ பிரதேச செயலகப் பிரிவை ஹிக்கடுவ, ரத்கம மற்றும் மாதம்பாகம பிரதேச செயலகப் பிரிவாகவும், பத்தேகம பிரதேச செயலகப் பிரிவை பத்தேகம மற்றும் வந்துரம்ப பிரதேச செயலகப் பிரிவாகவும், பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவை பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேச செயலகப் பிரிவாகவும் தரமுயர்த்துவதற்கும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நீல்தன்தாஹின்ன, தலவாகெலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட் ஆகவும் வாவுனியா மாவட்டத்தில் ஓமந்தையாகவும் புதிய செயலகப் பிரிவுகளை தாபிப்பதற்கும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.