• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி பேராதனை பிரதேசத்தில் புதிய மும்மொழிக் கலவன் தேசிய பாடசாலையொன்றை ஆரம்பித்தல்
- கண்டி நகரம் மற்றும் அருகாமையிலுள்ள புறநகர் பகுதிகள் பிரபல்யமடைந்து வருவதுடன், கண்டி கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு பிள்ளைகள் அனுமதிப் பதற்கான போட்டி தீவிரமாக மாறியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், அப்பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்கு தரமான கல்வியினை வழங்கும் நோக்குடன் அந்த நகரத்திற்கு அருகாமையில் கலவன் பாடசாலையொன்றை ஆரம்பிப்பதுடன் அவர்களின் கல்விக்கான வாய்ப்புக்களின் நோக்கெல்லையை விரிவாக்குவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆதலால், பேராதனை பிரதேசத்தில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித்துண்டொன்றில், ஒவ்வொரு தரத்திற்கும் 6 இணை வகுப்புக்களுடன் சேர்த்து, 1,141.46 மில்லியன் ரூபா முதலீட்டைக் கொண்டு புதிய மும்மொழிக் கலவன் தேசிய பாடசாலையொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.