• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவசியமானவிடத்து சந்தேகநபர்கள் / குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்திற்கு வருகைதரும் தேவையிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துதல்
- விலக்கமறியலில் இடுவதற்குரிய கட்டளையை நீடிக்கும் பொருட்டு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கைதிகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் சட்டத் தேவையின் காரணமாக கைதிகளும், சிறைச்சாலை பதவியணியினரும், பொதுமக்களும் கணிசமான ஆபத்துக்கு ஆளாகின்றமையினால் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையை திருத்துவதன் மூலம் இந்த சட்டத் தேவையை தளர்த்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற் கமைவாக விசேட சந்தர்ப்பங்களின் கீழ் சந்தேக நபர்கள் / குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்திற்கு வருகைதரும் தேவையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.