• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாவட்ட / பிரதேச மட்டத்தில் வௌிக்கள கடமைகளைக் கையாளும், கலாசார விடயத்திற்கு பொறுப்பான வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை வழங்குதல்
- கலாசாரத்துடன் இணைந்துள்ள கலைக்கூறுகளை பேணிப் பாதுகாப்பதுடன் அவற்றை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்வதற்கும் எமது சொந்த அடையாளத்தை உலகிற்கு காட்டுவதற்கும் இலங்கையின் கலாசாரத்தின் முன்னோடியாக அதன் பணியினை நிறைவேற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களமானது இத்திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கலாசார விடயத்திற்கு பொறுப்பான வௌிக்கள உத்தியோகத்தர்களின் மூலம் அதன் சேவைகளை ஆற்றுகின்றது. கலாசார மரபுரிமையின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பரப்புரை தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களானவை மாவட்ட மட்டத்தில் கலாசார விடயத்திற்கு பொறுப்பாகவுள்ள கூறப்பட்ட உத்தியோகத்தர்களினால் ஒழுங்கமைக்கப் படுவதுடன் அதேவேளை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 'தொலஸ்மகே நிகழ்ச்சித்திட்டம்' மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் பங்களிப்பை செய்கின்றனர். அதற்கிணங்க, அவ்வுத்தியோகத்தர்களின் சேவையின் தர அம்சத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை அவர்களுக்கு மேலும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கோரி வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.