• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறக்கோட்டை ஒல்லாந்தர் நூதனசாலையை பாதுகாத்தலும் மறுசீரமைத்தலும்
- புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் நூதனசாலையானது கிட்டத்தட்ட 350 வருடங்களுக்கு முற்பட்ட ஒல்லாந்தரின் காலனித்துவ ஆட்சி காலப்பகுதியின் போது நிர்மாணிக்கப்பட்டிருந்து. அது அக்காலத்தின் ஒல்லாந்த ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்பட்டிருந்தது. அப்போதிருந்து பிரசித்தமான பிரதேசமொன்றில் அமைந்துள்ள இந்தக் கட்டடமானது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொடர் கவனத்திற்கு உட்பட்ட இடமொன்றாகவுள்ளது. ஆதலால், இந்த நூதனசாலையின் இனங்காணப்பட்ட பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை 97.26 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.