• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண நகர வீடமைப்பு கருத்திட்டத்தை "அனைவருக்கும் உறைவிடம் " கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துதல்
- ஹொரண நகர வீடமைப்பு கருத்திட்டமானது நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2017 ஆம் ஆண்டின் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆனால், பிரேரிக்கப்பட்ட வீடுகளின் நிர்மாணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட காணியானது நகர எல்லைகளிலிருந்து தொலைவில் அமைந்துள்ளபடியினால் எழுந்த பிரச்சினைகள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துதல் சாத்தியமற்றதாகி யிருந்தது.. ஆதலால், பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தை, அதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரம் மற்றும் ஏற்பாடுகளின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் "அனைவருக்கும் உறைவிடம்" கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்ப ட்டுள்ளது. அதற்கிணங்க, 15 வருடங்களுக்குள் மாதாந்த தவணைகளாக மீள் செலுத்தும் அடிப்படையில் 6 சதவீதம் கொண்ட வட்டி வீதத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படும் 600,000/- ரூபாவைக் கொண்ட வீடமைப்புக் கடன் வசதியுடனும் சமுதாய பங்குபற்றல் அடிப்படையின் கீழ் 150,000/- ரூபாவைக் கொண்ட பெறுமதிக்கு பொருள்சார் உதவியினை வழங்கியும் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.