• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-05-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் திரையரங்குகளில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்திற்கான சிபாரிசு கடிதங்கள் வழங்குவதை இடைநிறுத்துதல்
- தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமானது அதன் ஆரம்பக் காலத்தில் திரையரங்குகளில் மதுபான கடைகளை தாபிப்பதில் தலையிடாதிருந்த போதிலும், காலப்போக்கில், திரையரங்குகளில் மதுபான கடைகளை நடாத்திச் செல்வதற்காக கூறப்பட்ட கூட்டுத்தாபனத்தின் சிபாரிசுகளுடன்கூடிய கடிதமொன்றை மதுவரித் திணைக்களம் எதிர்பார்த் துள்ளது. திரையரங்குகளின் மனையிடத்திற்குள் மதுபான கடைகளை அமைத்தலின் மூலம் திரையரங்கிற்கு வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையினை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. திரையரங்கிற்குள் சில ஆட்கள் மதுபானத்தையும் புகைத்தலையும் நுகர்தலானது பார்வையாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி திரையரங்கிற்கு வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான குறைவினை விளைவித்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், தரமான திரைப்பட கலாசாரமொன்றை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் படிமுறையொன்றாகவும் அத்துடன் போதைப் பொருள் பாவனையற்ற நாடொன்றை உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் நோக்குடனும், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் திரையரங்குகளில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத் திற்கான சிபாரிசு கடிதங்கள் வழங்குதலானது இதன் பின்னர் இடைநிறுத்தப்படும் என்ற நோக்கத்தின் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .