• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
- இலங்கையின் பொருளாதார நிலைமை இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் உரிய ஆண்டில் இணங்கியொழுகப்பட்ட நிதிக் கொள்கை, நடவடிக்கை தொடர்பிலான விபரங்களை உள்ளடக்கி நிதி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது. நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நிதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக சமர்பித்துள்ள இந்த ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பதில் நிதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.