• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரித்தல்
- 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் கீழ் 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தனியார் துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000/- ரூபாவாகவும் ஆகக்குறைந்த நாட் சம்பளம் 400/- ரூபாவாகவும் விதித்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவிதத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை 12,500/- ரூபாவாகவும் ஆகக்குறைந்த நாட் சம்பளத்தை 500/- ரூபாவாகவும் இருக்க வேண்டுமென தேசிய தொழிலாளர் மதியுரைச் சபை சிபாரசி செய்துள்ளது. இந்த சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தை திருத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.