• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
- உமா ஓயா பல்நோக்க அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக அதற்கு கீழே அமைந்துள்ள பக்மெடில்ல அணை சார்ந்தும் மினிபே இடதுகரை திட்டத்திற்கும் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறைக்கு மாற்று வழியொன்றாக தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த கருத்திட்டத்தின் மதியுரை ஒப்பந்தத்தை 333 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொருளியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கும் இதற்கான ஏனைய வசதிகளை செய்வதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.