• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜா-எல பிரதேச செயலகத்திற்கு புதிய ஐந்து மாடி கட்டடமொன்றை நிர்மாணித்தல்
- 57 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 218,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ஜா-எல பிரதேச செயலகத்திற்கு 167.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் புதிய பிரதேச செயலகக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த கட்டட நிர்மாணிப்பு பணிகளின் போது இனங்காணப்பட்ட மூல மதிப்பீட்டில் சேர்க்கப்படாத அத்தியாவசிய நிர்மாணிப்புகள், அதேபோன்று விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீடு 190.7 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் இதற்கிணங்க, தேவையான ஏனைய வசதிகளைச் செய்வதற்குமாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.