• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊவா வெல்லஸ்ஸ மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான வசதிகளை விருத்தி செய்தல்
- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் நூலக கட்டடத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை 384.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Darinton Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்திற்கான தளபாடங்களுடனான மூன்று மாடி விரிவுரை மண்டப கட்டடத்தின் நிர்மாணிப்பு கருத்திட்டத்தை 337.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் றுகுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் கப்பல் கல்வி மற்றும் கப்பற் பணிகள் தொடர்பில் உபகரணங்களுடன் கூடிய தெற்கு நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை 436.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.