• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலையொன்றை தம்புள்ளையில் நிர்மாணித்தல்
- புதிய கமத்தொழில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தக்கூடிய 60 அறைகளைக் கொண்ட 5,000 மெற்றிக் தொன் கொள்ளவினையுடைய வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலை யொன்றை தம்புள்ளையில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் செலவானது 300 மில்லியன் ரூபா சார்பில் இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. இந்த நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிர்மாணிப்புகளுக்கான ஒப்பந்தத்தை M/s.SAW Engineering (Pvt.) Ltd., நிறுவனமும் LQ Import Export (Pvt.) Ltd., நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டுத் தொழில்முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த களஞ்சிய கட்டடத் தொகுதியில் மேலும் மேற்கொள்ளப்படவேண்டிய மீதி வேலைகளுக்கு 225 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மேற்போந்த ஒப்பந்தக்காரரைக் கொண்டே செய்து கொள்வதற்கும் இதன் பொருட்டுத் தேவையான ஏனைய வசதிகளை வழங்கும் பொருட்டும் பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.