• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“நிர்மாண தொழில் சபை சட்டமூலத்தை" பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கை நிர்மாண தொழில் சபையானது 2001 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, பின்னர் 2003 ஆம் ஆண்டில் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக கூட்டிணைக்கப்பட்டது. தற்போது 12 தொழில்சார் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் இந்த சபையில் உறுப்பாண்மையைக் கொண்டுள்ளதோடு, சுமார் 300 தனியார் கம்பனிகள் இந்த சபையுடன் நேரடியாக தொடர்புகளைக் கொண்டுள்ளன. இலங்கை நிர்மாண தொழில் சபை (கூட்டிணைத்தல்) சட்டமூலமானது பிரத்தியேக உறுப்பினர் சட்டமூலமொன்றாக பாரளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் இது தொடர்பில் நிர்மாணிப்பு தொழில்சார்ந்த தரப்பினர்களினதும் கருத்துகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.