• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான தேசிய கட்டடங்கள் விதிமுறைகளை தயாரித்தல்
- அண்மையில் கட்டிடங்கள் இடிந்து விழுதல், தீப்பிடித்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கட்டடங்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து செல்லும் போக்கு இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் பெரும்பலானவைக்கு காரணமாய் அமைந்துள்ளது நிர்மாணிப்பு பணிகளின் போது உரிய பொறியியல் செயற்பாடுகள் பின்பற்றாமையும் தகமையற்றவர்களை நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபடுத்துகின்றமையும் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், பாதுகாப்பற்ற கட்டடங்களை இனங்காணுதல் இத்தகைய கட்டடங்களின் நிலைமைகளை மதிப்பிடுவதற்கு முறையான பொறிமுறை யொன்று இலங்கையில் இல்லாமை என்பவற்றின்பாலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆலால், கட்டடங்களை வடிவமைத்தல், நிர்மாணித்தல், மாற்றங்களைச் செய்தல், பராமரித்தல் போன்ற பணிகளை கட்டுப்படுத்தும் பொருட்டிலான ஒழுங்கு விதிகளாக தேசிய கட்டடங்கள் விதிமுறைகளை தயாரிக்கும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை கட்டடங்கள் நிர்மாணிப்பு பிரிவு சார்பில் தேசிய கட்டடங்கள் விதிமுறைகளை தயாரிக்கும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.