• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்துதல்
- தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டமானது சீனாவின் EXIM வங்கியின் நிதியின் கீழ் சீனாவின் Sino Hydro Corporation Ltd., கம்பனியினால் 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் நிர்மாணிக்கும் பொருட்டு அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்குரிய வரிச் செலவு, சுற்றாடல் அபிவிருத்தி பணிகள், காணி சுவீகரிப்பு பணிகள், நட்டஈடு வழங்குதல், மீளக் குடியமர்த்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளுக்காக மேலும் 7,227 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த மேலதிகத் தொகையினை உள்ளடக்கி கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டை 174 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகவும் உள்நாட்டு செலவாக 7,227 மில்லியன் ரூபாவாகும் திருத்துவதற்கும் மேலதிகமாக மதிப்பிடப்பட்ட செலவுக்கான நிதி ஏற்பாடுகளை 2019-2023 காலப்பகுதிக்குள் திறைசேரியிலிருந்து ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.