• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுக நகர பிரதேசத்தை விசேட வலையமொன்றாக பேணுதல்
- தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு உயர் பெறுமதி வாய்ந்த வௌிநாட்டு முதலீடுகளை கவர்ந்து ஈர்ப்பதற்காக கடல் மணல் பயன்படுத்தி கடலை நிரப்பியதன் மூலம் துறைமுக நகர பூமியானது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 269 ஹெக்டயார் விஷ்தீரணமுடைய காணி இலங்கை நிலப்பரப்புடன் சேர்வதோடு, இது வீதிகள் மற்றும் பொது இடங்களுடன் கூடிய 91 ஹெக்டயார் பிரதேசத்தில் 2 கிலோ மீற்றர் நீளமான கரையோரம், பிரதான பூங்கா, ஆண்டில் எந்தவொரு காலப்பதியிலும் நீந்துவதற்கும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் ஏற்ற கடற்பரப்பு மற்றும் நகரத்தின் ஊடாக செல்லும் 70 மீற்றர் அகலம் கொண்ட கால்வாயொன்றும் தாபிக்கப்படும். அதேபோன்று விடுதி, களியாட்ட வசதிகளுடன் கூடிய ஓய்வு துறைமுகம், பொழுதுபோக்கு பூங்கா, சர்வதேச கல்வி, சர்வதேச சுகாதார சேவை, மாநாட்டு மண்டபம் என்பன இந்த பிரதேசத்தில் அமைந்திருக்கும். எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கவுள்ள கொழும்பு துறைமுக நகரத்தை மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க காணியொன்றாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துதல் அடங்கலாக ஏனைய பணிகளை செய்வதற்காக இந்த பிரதேசத்தை முகாமிப்பதற்கும் பேணுவதற்கும் தேவையான அதிகாரங்களுடன் கூடிய ஆதனங்கள் முகாமைத்துவ கம்பனியொன்றை தாபிப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.