• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தை மீளக் கட்டமைத்தல்
- அளவிடல், தொழினுட்ப அளவிடல் மற்றும் சட்ட அளவிடல் போன்ற துறைகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மிக பயனுள்ள வகையிலும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த திணைக்களத்தின் நிருவாக பணிகள், ஆட்சேர்ப்பு திட்டங்கள் பெறுகை நடவடிக்கைகள் மற்றும் அளவிடல் தொடர்புபட்ட பணிகள் மீளக் கட்டமைக்கப்படவேண்டுமென இனங்காணப் பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.