• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
- இரத்தினபுரி மற்றும் காலி போன்ற அருகில் அமைந்துள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்கும் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் பெரும்பாலான கட்டடங்கள் 50 வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்தவையாவதோடு, அவற்றை துரிதமாக விருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நோயாளர்களுக்கான தரம்வாய்ந்த சிகிச்சை சேவையொன்றை வழங்கும் நோக்கில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பொது வசதிகளுடன் கூடிய கட்டடம், வௌிநோயாளர் பிரிவுக்கான கட்டடம், நோய் நிர்ணய பணிகளுக்கான கட்டடத் தொகுதி, சலவை செய்யுமிடம், அறுவைசிகிச்சை காவறை கட்டடத் தொகுதி, பணியாட்டொகுதியினருக்கான தங்குமிட வசதி மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்கள் என்பவற்றை நிர்மாணிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கிணங்க உத்தேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை 6,221 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.