• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பிலான தேசிய பல்தரப்பு செயற்திட்டம் - 2016 - 2020
- இலங்கையிலுள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களில் சுமார் 70 சதவீதம் இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம். மற்றும் புற்றுநோய் போன்ற நீண்ட கால தொற்றா நோய்கள் என கண்டறியப்பட்டுள்ளதோடு, இதுபற்றி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்மூலமும் இவற்றின் அதிகரிப்பினையும் காட்டுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உரிய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் தொற்றா நோய்களை தடுப்பதற்கு 2016 - 2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019 ஆம் ஆண்டு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டிற்குள் பொது மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.