• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹெடஓயா பல்நோக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல்
- சியம்பலாண்டுவ, மடுல்ல, லாகுகல, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுகளுக்கு நீர்ப்பாசன மற்றும் குடிநீர் வழங்குவதற்கும் இந்தப் பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கினை கட்டுப்படுத்தும் பொருட்டும் ஹெடஓயா பல்நோக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பல்நோக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உருவாகக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் இதன் மூலம் பாதிக்கப்படும் பிரதேசவாசிகளின் தேவைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் பொருட்டு உரிய தரப்பினர்களினதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயலணியொன்றைத் தாபிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கும் இந்த பிரேரிப்பினை நடைமுறைப்படுத்தும் போது எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சர்களைக் கொண்ட உபகுழுவொன்றைத் தாபிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.