• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்குதல்
- பல வருடங்களாக குறைந்த வினைத்திறன் மட்டத்தை பதிவு செய்துள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையையும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தையும் மீள் கட்டமைப்பதற்குரிய பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, அதன் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது அரசாங்கத்தின் செலவு பொறுப்பாகவுள்ளது. இந்த நிறுவனங்களை மீள் கட்டமைத்து இலாபகரமானதாக நடாத்திச் செல்வதற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு மேலும் கணிசமான காலம் செல்லலாம் என்பதனால் 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து யூன் மாதம் வரை இந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துவதற்கு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு 113 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினையும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கு 78 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினையும் வழங்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.