• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 நிதியாண்டுக்குரியதாக நிலுவையிலுள்ள பொறுப்புக்களைத் தீர்த்தல்
- 2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்கான கொடுப்பனவுகள், அரசாங்க வருமானம் எதிர்பார்க்கப்பட்ட அளவு அதிகரிக்காமை / கிடைக்காமை காரணமாக ஏற்பட்ட வருமான குறைப்பாட்டின் மீது அந்த ஆண்டிலேயே தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கமைவாக, அந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்குரிய நிலுவைப் பொறுப்புகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதியினை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.