• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்காக நிர்மாணிக்கப்படும் 17 மாடிகளைக் கொண்ட கட்டடத்திற்கு 5,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியுதவி வழங்குதல்
- கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்காக 17 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அங்கீகாரம் இதற்கு முன்னர் வழங்கப்பட்டதோடு, இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி வசதியினை இந்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய நிர்மாணிப்பு பணிகளுக்குத் தேவையான 5,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை இலங்கை வங்கியின் ஊடாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.