• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் நிருவாக பணிகளை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு கையளித்தல்
- 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கும் அதற்கான திருத்தங்களுக்கும் அமைவாக இந்த சட்டத்தின் நிருவாக பணிகள் உற்பத்தி வரிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி சட்டத்தின் நோக்கங்களுக்காக உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) பணிப்பாளர் அதிபதியாக சுங்கப் பணிப்பாளர் அதிபதியை நியமிப்பதற்கும் அதற்கிணங்க உரிய சட்டத்தை திருத்துவதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த தீர்மானத்திற்கு அமைவாக இந்த சட்டத்திற்கு திருத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மேற்போந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் எழும் சில பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உற்பத்தி வரிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்கள் சம்பந்தமாக வரி விதித்தல், வரி சேகரித்தல், நிலுவை வரிகளை அறவிடுதல் மற்றும் மேலதிகமாக அறவிடப்பட்ட வரியினை மீளச் செலுத்துதல் போன்றவற்றுக்கு சுங்கப் பணிப்பாளர் அதிபதிக்கு அதிகாரத்தினைக் கையளித்து உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.