• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளத்தில் 'ஆனந்தகுடி' மகா விகாரை மற்றும் ராதோ மச்சிந்திரநாத் இந்துக் கோவில் ஆகியவற்றை புனரமைக்கும் கருத்திட்டம்
- நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் சேதமடைந்த சுயாம்புநாத்திலுள்ள 'ஆனந்தகுடி' மகா விகாரை மற்றும் லலிப்பூரிலுள்ள ராதோ மச்சிந்திரநாத் இந்துக் கோவில் ஆகியவற்றை அரசாங்கத்தினால் புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புக்காக இதுவரை 293.54 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, 'ஆனந்தகுடி' மகா விகாரை புனரமைப்பு பணிகளில் 84 சதவீத பௌதிக முன்னேற்றமும் ராதோ மச்சிந்திரநாத் இந்துக் கோவில் புனரமைப்பு பணிகளில் 43 சதவீத பௌதிக முன்னேற்றமும் ஈட்டப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணிகளை உத்தேசிக்கப்பட்டவாறு பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் நிதி சம்பந்தமாக புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை பரிசீலனை செய்து 114 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.