• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டினுள் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 100 மெ.வொ. மேலதிக மின்சார ஆற்றலை ஆறு (06) மாத காலத்திற்கு கொள்வனவு செய்தல்
- தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 100 மெ.வொ. மேலதிக மின்சார ஆற்றலை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பல்லேகலே மின்னறி துணை நிலையம் சார்பில் 24 மெ.வொ. மின் ஆற்றலையும் காலி மின்னறி துணை நிலையம் சார்பில் 10 மெ.வொ. மின் ஆற்றலையும் கிலோ வொட் ஒன்று 30.20 ரூபா தொகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய இராச்சியத்தின் Aggreko International Project Ltd., நிறுவனத்திற்கும் மஹியங்கனை மின்னறி துணை நிலையம் சார்பில் 10 மெ.வொ. மின் ஆற்றலை கிலோ வொட் ஒன்று 30.58 ரூபா தொகைக்கும் பொலன்நறுவை மின்னறி துணை நிலையம் சார்பில் 8 மெ.வொ. மின் ஆற்றலை கிலோ வொட் ஒன்று 30.63 ரூபா தொகைக்கும் வழங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிர் குடியரசின் Altaaqa Alterrative Solution Global Fze நிறுவனத்திற்கும் அம்பாந்தோட்டை மின்னறி துணை நிலையம் சார்பில் 24 மெ.வொ. மின் ஆற்றலை கிலோ வொட் ஒன்று 28.43 ரூபா தொகைக்கும் ஹொரனை மின்னறி துணை நிலையம் சார்பில் 24 மெ.வொ. மின் ஆற்றலை கிலோ வொட் ஒன்று 28.70 ரூபா தொகைக்கும் வழங்கும் ஒப்பந்தத்தை ஹொங்கொங் V Power Holdings Ltd., நிறுவனத்திற்கும் ஆறு (06) மாத காலத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.