• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பங்குபரிவர்த்தனையை பங்குகளால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக மாற்றுதல்
- இலாபத்தினை நோக்காக கொள்ளாது உறுப்பினர்களினால் நிருவகிக்கப்படும் அமைப்பொன்றாக செயற்படும் கொழும்பு பங்குபரிவர்த்தனையை இலாபத்தினை நோக்காக கொண்ட பங்குதாரர்களின் உரிமைக்கான கம்பனியொன்றாக மாற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக அதன் சட்ட அந்தஸ்தினை பங்குகளினால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றுவதற்காக சட்டமூலத்தில் மேலும் செய்யப்படவேண்டுமென இனங்காணப்பட்டுள்ள கொழும்பு பங்கு பங்குபரிவர்த்தனையின் பங்குகள் பகிரப்படவேண்டிய நூற்றுவீதத்தையும் உள்ளடக்கி திருத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.