• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் விசேட மகப்பேற்று பிரிவொன்றை நிர்மாணித்தல்
- நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சேவை வழங்கும் டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலைக்கு இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் குருதியமுக்கம் போன்ற உட்சிக்கல் வாய்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் மகப்பேற்றுக்காகவும் வேறு சிகிச்சைகளுக்காகவும் வருகைத்தருகின்றனர். இந்த தாய்மார்களுக்கு தரமிக்க சுகாதார சேவை வசதிளை செய்யும் நோக்கில் இந்த வைத்திசாலையில் விசேட மகப்பேற்று பிரிவொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிர்மாணிப்புக்கான ஒப்பந்தத்தை 249.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு / Central Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.