• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தை திருத்துதல்
- விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டமானது 1993 ஆம் 1998 ஆம் 2005 ஆம் ஆண்டுகளில் காலத்தின் தேவையின் மீது திருத்தப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு சங்கங்களின் வருடாந்த கணக்கு அறிக்கைகள் கணக்காய்வாளர் அதிபதியினால் சிபாரிசு செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையொன்றின் கீழ் கணக்காய்வு செய்வதற்கு அங்கீகாரம் வழங்குதல், விளையாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கு அமைச்சருக்கு இயலுமான விடயங்களை விரிவாக வரைவிலக்கணப்படுத்துதல், விளையாட்டு சட்டத்தின் கீழ் அறவிடப்படும் தண்டத்தொகையை அதிகரித்தல். ஓட்ட, மைதான விளையாட்டுக்கள் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் பெயர்பெற்ற மற்றும் ஒலிம்பிக் அல்லது அதற்கு சமமான போட்டிகளில் பங்குபற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் இருவராவது தேசிய விளையாட்டு சபையில் சேர்க்கப்படும் விதத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்தல், விளையாட்டு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தினை மேலும் பலப்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தை இற்றைப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை செய்வதற்கான சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.