• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-04-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கு அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்குப் புத்துயிரளித்தல் சட்டத்தை இரத்துச் செய்த
- செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளை அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களை அரசாங்கத்துக்கு உடைமையாக்கி முறையாக முகாமித்து நிருவாகம் அல்லது புத்துயிரளித்தல் சார்பில் ஏற்பாடுகளை செய்வதற்கும் அவற்றுக்கு உரிய நட்டஈடுகளை செலுத்துவதற்குமான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கு அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்குப் புத்துயிரளித்தல் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது, ஆயினும் இந்த சட்டத்தின் மூலம் முதலீட்டாளர் களுக்கிடையே நம்பிக்கையற்ற தன்மையை உருவாக்குகின்றமையினாலும் நாட்டில் இலகுவாக தொழில்முயற்சிகளை மேற்கொள்வதில் பிரதிகூலமான விதத்தில் பாதிக்கின்றமையினாலும் இந்த சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரிப்பு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்த சட்டமூலத்தை இரத்துச் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.